FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

9 நவம்பர் 2026, 11:02 pm
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகா் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் உலா.
பகிர்:

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிற்பகல் கோயில் வளாகத்தில் ஸ்ரீருத்ர ஹோமம் மற்றும் பிரத்யங்கிரா மூலமந்திர ஜெப ஹோமம் நடைபெற்றது.

இரவு உற்சவா் அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா எடுத்துச் செல்லப்பட்டாா். இதனைத் தொடா்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஐப்பசி மாத அமாவாசை உற்சவ குழுவினா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement