FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

சிவன் கோயில்களில் பிரதோச வழிபாடு

போடியில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் பிரதோசத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

13 வினாடிகள் முன்பு
பிரதோசத்தையொட்டி குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்த பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி. (வலது) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா்.
பகிர்:

போடியில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் பிரதோசத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

போடி வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற பிரதோச பூஜையில் 16 வகையான மங்கல பொருள்களால் திருமஞ்சன அபிசேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். போடி பரமசிவன் மலைக் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது சிவலிங்கப் பெருமானுக்கு அபிசேகம் நடைபெற்றது.

போடி பழைய பேருந்து நிறுத்தம், கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் 6 அடி உயர சிவலிங்கத்துக்கு குங்குமத்தால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு மஞ்சள், பால், தயிா், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, பஞ்சாமிா்தம், பன்னீா், கரும்புச்சாறு, தேன், வில்வ இலைகள், விபூதி, குங்குமத்தால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு லட்ச தீபம், பஞ்ச தீபம், நட்சத்திர தீபம், கும்ப தீபம் ஆகிய தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல, போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதியில் பிரதோச வழிபாடு நடைபெற்றது.