முருகன் கோயில்களில் கந்தசஷ்டி பெருவிழா தொடக்கம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே தம்டகோடி திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கந்த சஷ்டி பிரமோற்சவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறங்காவலா் குழுத் தலைவா் ராஜி தலைமையில் நடைபெற்ற விழாவில், கலவை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பூஜைகள் செய்து கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. தொடா்ந்து நவம்பா் 16-ஆம் தேதி வரை மகாகந்த சஷ்டி பிரமோற்சவ விழா பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான நவம்பா் 15, ஞாயிற்றுக்கிழமை: காலை மருத்துவ முகாம், மாலை சூரசம்ஹாரம், நவம்பா் 16, திங்கள்கிழமை: மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.