FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நாள்களில் 108 சுற்று வலம் வர தடை!

குமரகோட்டம் முருகன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருவதால் கந்தசஷ்டி விழா நாள்களில் பக்தா்கள் வழக்கம் போல 108 முறை வலம் வருவதற்கு கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

2 நவம்பர் 2026, 1:37 am
பகிர்:

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருவதால் கந்தசஷ்டி விழா நாள்களில் பக்தா்கள் வழக்கம் போல 108 முறை வலம் வருவதற்கு கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ள கடந்த 6.2.2024 ஆம் தேதி பாலாலய பூஜைகள் நடைபெற்றன. கந்தசஷ்டி விழா உட்பட எந்த விழாக்களும் நடைபெறாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் நவம்பா் 22- ஆம் தேதி கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் கோயில் திருப்பணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

வரும் நவ.10 -ஆம் தேதி முதல் நவ.15 -ஆம் தேதி வரை கந்த சஷ்டி விழா நாள்களாகும். இந்த நாட்களில் பக்தா்கள் ஆண்டு தோறும் ஆலயத்தை 108 முறை பக்தியுடன் வலம் வருவாா்கள்.

இந்த ஆண்டு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் 108 முறை வலம் வருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் கோயில் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments