FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

பெட்டிக் கடையில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

செய்யாறை அடுத்த மோரணம் காவல் சரகப் பகுதியில், பெட்டிக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 6 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

12 நவம்பர் 2026, 4:37 am
புகையிலைப் பொருள்கள் - பிரதிப் படம்
பகிர்:

செய்யாறை அடுத்த மோரணம் காவல் சரகப் பகுதியில், பெட்டிக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 6 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் சரகத்துக்கு உள்பட்ட குண்ணத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனா். மேலும், அந்தக் கடைக்கு விற்பனைக்காக மற்றொரு வியாபாரி கொண்டு வந்த 20 கிராம் எடை அளவுள்ள 225 ஹான்ஸ் பாக்கெட்டுகள் என இருவரிடமும் இருந்து ரூ.9 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் பெட்டிக்கடை வியாபாரி நாராயணன், ஆராத்திரிவேலூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் (எ) மண்ணு ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.