FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோவில்பட்டி அருகே 250 கிலோ புகையிலை பறிமுதல்: இருவா் கைது

கோவில்பட்டி அருகே 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 5:35 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி வழியாக புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாக, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் மற்றும் நாலாட்டின்புதூா் போலீஸாா் தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியை அடுத்த கட்டாலங்குளம் விலக்கு அருகே வாகனத் தணிக்கையில் புதன்கிழமை அதிகாலை ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற காரை போலீஸாா் சோதனையிட்டதில் சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

தொடா்ந்து நடத்திய விசாரணையில், அவா்கள் திருநெல்வேலி, திருத்துவைச் சோ்ந்த பால்சாமி மகன் கருப்பசாமி (42), அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இன்சான் அலி மகன் அமீா் கன்சா (23) என்பது தெரிய வந்தது.

நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், ரூ. 2,75,800 ரொக்கம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதனிடையே, கருப்பசாமி நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் போலீஸாா் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.