FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வரலாற்றைத் திருத்திய அமெரிக்க தேர்தல் முடிவுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலத்தின் மத்தியில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் முக்கியத்துவமான இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

5 நவம்பர் 2026, 5:35 am
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலத்தின் மத்தியில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் முக்கியத்துவமான இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்றம் மட்டுமின்றி பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டு, முடிவுகள் புதன்கிழமை வெளியாகின.

இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா கடந்த பிப்ரவரியில் தொடங்கிய ஈரான் போரினால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் நீடித்த எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வால், மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியின் எதிரொலியாக, தேர்தல் முடிவுகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

Advertisement

Advertisement

அதிபர் டிரம்ப் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள இத்தேர்தலில் இருகட்சி வேட்பாளர்களாலும் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

முதல் கருப்பின ஆளுநர்கள்

ஜார்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில், 1998-க்குப் பிறகு ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் 54.31 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சியின் பணக்கார வேட்பாளர் ரிக் ஜாக்சனை தோற்கடித்து, அமெரிக்க வரலாற்றில் ஆளுநராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் கீஷா லான்ஸ்.

இதேபோல், நிவேடாவின் முதல் கருப்பின ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் ஆரோன் ஃபோர்ட், ஃபுளோரிடாவின் குடியரசுக் கட்சியின் முதல் கருப்பின ஆளுநராக பைரோன் டொனால்ட்ஸ் வெற்றி பெற்றுள்ளனர்.

முதல் கருப்பின அவைத் தலைவர்

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், அக்கட்சி சார்பில் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் முதல் கருப்பின அவைத் தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பூர்விக அமெரிக்க பெண்கள்

நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் முதல் பூர்விக அமெரிக்க பெண் ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் டெப் ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், மின்னசோட்டா மாகாண செனட் தேர்தலில் வென்ற ஜனநாயகக் கட்சியின் பெக்கி ஃபிளேநாகன், அமெரிக்க செனட் அவைக்குத் தேர்வாகும் முதல் பூர்விக அமெரிக்க பெண் எனும் பெருமையைப் பெற்றார்.

மேலும், மின்னசோட்டா மாகாண முதல் பெண் ஆளுநராக ஜனநாயகக் கட்சின் ஏமி குளோபுச்சார் வென்றுள்ளார்.

முதல் தன்பாலின ஈர்ப்பாளர்

செனட் அவைக்கு நியூ ஹாம்சயர் மாகாணத்தில் இருந்து ஜனநாயகக் கட்சியின் கிறிஸ் பாப்பாஸ் 56.21 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதன்மூலம், செனட் அவைக்குத் தேர்வாகும் முதல் தன்பாலின ஈர்ப்பாளராக மாறியுள்ளார்.

முதல் முஸ்லிம் செனட்டர்

மிச்சிகன் மாகாண செனட் தேர்தலில் வென்றுள்ள ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல் சயீத், செனட் அவைக்குத் தேர்வாகும் முதல் முஸ்லிம் எனும் பெருமையைப் பெற்றார்.

கன்சாஸில் 1932-க்குப் பிறகு...

கன்சாஸ் செனட் தேர்தலில் 90 ஆண்டுகால குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகக் கட்சியின் ஆடம் ஹமில்டன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கடந்த 1932-க்குப் பிறகு முதல்முறையாக கன்சாஸ் மாகாணத்தில் இருந்து ஒரு ஜனநாயகக் கட்சி செனட்டர் தேர்வாகியுள்ளார்.

டெக்சாஸ் உள்ளிட்ட பிற கோட்டைகளில்...

குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் டெக்சாஸில் செனட் தேர்தலில் 1988-க்குப் பிறகும், மாகாணத் தேர்தலில் 1990-க்குப் பிறகும் ஜனநாயகக் கட்சி முதன்முறையாக வெற்றி வாகை சூடியுள்ளது.

இதேபோல், மெயின் (1988), தெற்கு கரோலினா (1998), லோவா, (2008) ஆகிய மாகாண செனட் தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சி நீண்ட காலத்துக்குப் பிறகு வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.