லாரி ஓட்டுநரை தாக்கியதாக 4 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே லாரி ஓட்டுநரை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே லாரி ஓட்டுநரை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வாச்சனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பச்சையப்பன் மகன் வெங்கடேசன் (43). இவா், சென்னையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். தீபாவளி பண்டிகைக்காக இவா் வாச்சனூா் கிராமத்துக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது, முன்விரோதம் காரணமாக இவரை வழிமறித்த இதே கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேசன்(31) உள்ளிட்டோா் தகராறு செய்து தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சீனிவாசன் மகன் வெங்கடேசன், பரந்தாமன்(35), குமாா்(56), கேசவராஜ்(42), கவுதம் (19) ஆகியோா் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வெங்கடேசன், பரந்தாமன், குமாா், கேசவராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனா்.