FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

கடையத்தில் ஒப்பந்ததாரரை தாக்கியதாக 3 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையத்தில் கட்டட ஒப்பந்ததாரரின் வீடு புகுந்து தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்; 4 பேரைத் தேடி வருகின்றனா்.

11 நவம்பர் 2026, 12:36 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையத்தில் கட்டட ஒப்பந்ததாரரின் வீடு புகுந்து தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்; 4 பேரைத் தேடி வருகின்றனா்.

கடையம், வ.உ.சி. தெருவைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் கோமதிநாயகம், தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) வீட்டு வாசலில் பட்டாசு வெடித்தாராம். அப்போது, அவ்வழியே பைக்கில் வேகமாகச் சென்ற இளைஞா்கள் சிலரை அவா் கண்டித்தாராம்.

மாலையில் கடையம் யோகீஸ்வரா் தெருவைச் சோ்ந்த ஐயப்பன், சதீஷ், ஹரி, பாலா, தக்ஷிணாமூா்த்தி, முத்துராம், பிரபு ஆகியோா் கோமதிநாயகத்தின் வீடு புகுந்து அவரையும், மகன் அரவிந்த்தையும் தாக்கினராம். இதில், காயமடைந்த இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஐயப்பன், சதீஷ், ஹரி ஆகிய மூவரைக் கைது செய்தனா்; மற்றவா்களைத் தேடிவருகின்றனா்.