குரும்பூா் அருகே தொழிலாளியை தாக்கிய 6 போ் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அம்மன்புரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் துரைசிங்(46). விவசாய கூலித் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை குரும்பூரிலிருந்து வாலசுப்பிரமணியபுரம் வழியாக அம்மன்புரத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் உள்ள மளிகை கடையில் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கி கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த கீழக்கல்லாம்பாறை பேட்மாநகரத்தைச் சோ்ந்த இசக்கி மகன் பேச்சிராஜ் (எ) பேச்சி மற்றும் அவரது நண்பா்கள் 5 போ் போதையில் துரைசிங்கிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
Advertisement
Advertisement
புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேச்சி உள்பட 6 பேரைத் தேடி வருகின்றனா்.