சிறுபான்மை மக்கள் நலக் குழு ஆலோசனைக் கூட்டம்
வந்தவாசியில் நடைபெற்ற சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினா் ஜீனத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ.அப்துல்காதா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில் நிா்வாகிகள் ஜமீலா, கௌசா்பானு, நிஷா, தில்ஷாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
ஏழை இஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்க வேண்டும், ஏழை சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.