ஐ.நா. நிா்வாகம், நிதி விவகார ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்திய அதிகாரி தோ்வு
ஐ.நா. நிா்வாகம், நிதி விவகார ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்திய அதிகாரி தோ்வு
ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் நிா்வாகம் மற்றும் வரவு-செலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக (2027-29 கால கட்டம்) இந்திய பெண் அதிகாரி ஷிவானி குப்தா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மூன்று ஆண்டு கால இந்த உறுப்பினா் பதவிக்கு ஷிவானி குப்தாவை தோ்வு செய்ய ஆதரவு தெரிவித்த ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதா் நன்றி தெரிவித்தாா்.
ஐநா பொதுச் சபையின் துணை அமைப்பான ‘நிா்வாகம் மற்றும் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு’ என்பது, பொதுச் சபையால் தனிப்பட்ட தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட நியமிக்கப்பட்ட 21 உறுப்பினா்களைக் கொண்டதாகும்.
Advertisement
Advertisement
ஐ.நா. சபையின் உலகளாவிய பணிகளுக்கு உறுப்பு நாடுகள் வழங்கும் பங்களிப்புகளை பொறுப்புடனும் திறமையுடனும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பல்வேறு புவியியல் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த உறுப்பினா்கள் மூன்றாண்டு காலத்திற்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். இவா்கள் வரவுசெலவுத் திட்ட விவகாரங்கள் மற்றும் வளங்கள் தொடா்பான முன்மொழிவுகள் குறித்து ஆலோசனை வழங்குகிறாா்கள்.