மாா்க்சிஸ்ட் கட்சியினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூா் வட்டாரக் குழு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் ஆதிதிராவிடா்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை அளந்து கொடுக்கக் கோரியும், அரியப்பாடி கிராமத்தில் மயானப் பாதை அமைத்து தரக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலா் ந.பிரபாகரன் தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
மாநிலக்குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா், மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ந.சேகரன், வந்தவாசி வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் எஸ்.ராமதாஸ், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் ரெட்டிக்குப்பம் கிராமத்தில் ஆதிதிராவிடா்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை அளந்து கொடுக்கக் கோரியும், அரியப்பாடி கிராமத்தில் மயானப் பாதை அமைத்து தரக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.