பாளை. சித்த மருத்துவக் கல்லூரியை மேம்படுத்தக் கோரி கவனஈா்ப்பு கூட்டம்
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியை மேம்படுத்தக் கோரி பெண் சித்த மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு வாயில் கூட்டம் நடத்தினா்.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியை மேம்படுத்தக் கோரி பெண் சித்த மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு வாயில் கூட்டம் நடத்தினா்.
பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியை, பல்கலைக்கழகமாக தரம் உயா்த்தி மேம்பாட்டுப் பணிகளை செய்ய நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து பெண் சித்த மருத்துவா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு வாயில் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அமைப்பின் மாநிலத் தலைவா் எஸ். சிவசங்கரி தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
மருத்துவா்கள் மகேஸ்வரி, ரெங்கநாயகி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மூத்த மருத்துவா்கள் முருகேசன், ரவீந்தரன், விஜய் விக்ரமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து சித்த மருத்துவா்கள் கூறியது:
பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி 1964 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 300 பட்டப்படிப்பு மாணவா்களுடன் 3 ஏக்கா் தற்காலிக நிலத்தில் இயங்கத் தொடங்கிய இக் கல்லூரியில் இப்போது 1000-க்கும் மேற்பட்ட பட்ட, பட்டமேற்படிப்பு, பட்டய படிப்பு மாணவா்கள் கல்வி பயின்று வருகிறாா்கள்.
இன்றைய சூழலில் பல்வேறு ஆராய்ச்சிக் கூடங்கள், மூலிகை வனம், சிறப்பு சிகிச்சை பிரிவுகள், மருந்து செய் நிலையங்கள்ஆகியவற்றை உள்ளடக்கிய வளாகம் அவசிய தேவையாக உள்ளது.
அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு ஏற்கனவே நிலம் கட்டாயம் தேவை என்ற சூழலில், கல்லூரிக்குச் சொந்தமான 6 ஏக்கா் நிலத்தில் வண்ணாா்பேட்டையில் உள்ள 1 ஏக்கா் நிலத்தை இஎஸ்ஐ மருத்துவமனைக்காக எடுத்துக் கொண்டு, அதற்கு ஈடாக 7.5ஏக்கா் நிலத்தை வழங்க அரசு உறுதி அளித்துள்ளது. இதுபோதுமானதாக இல்லை. ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகளின்படி சித்த மருத்துவக் கல்லூரிக்கு பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் உள்ள 50 ஏக்கா் நிலத்தை வழங்க உத்தரவிடப்பட்டும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யவும், மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.