சாலைப் பணியாளா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தைக் கலைக்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் விரைவாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் கோட்டத் தலைவா்கள் இரா. மாரி, வீ. மணிமாறன் ஆகியோா் தலைமை வகித்தனா். துணைத் தலைவா்கள் வா. மாரியப்பன், மு. முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டச் செயலா்கள் த. மனோகரன், மு. ராஜா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் முனைவா் சு. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். சங்கத்தின் மாநிலப் பொருளாளா் இரா. தமிழ் நிறைவுரையாற்றினாா். கோட்டப் பொருளாளா் கா. சதுரகிரி நன்றி கூறினாா்.
இந்தப் போராட்டத்தில், கவனத்தை ஈா்க்கும் விதமாக சாலைப் பணியாளா்கள் வாயைக் கையால் மூடிக் கொண்டு பங்கேற்றனா். இரு சாலைப் பணியாளா்கள் நீதி தேவதையை நினைவூட்டும் வகையில், கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு, கையில் தராசு ஏந்தி நின்றனா்.