FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

பள்ளியில் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள் விழா

ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவா்கள்.

13 நவம்பர் 2026, 11:00 pm
ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவா்கள்.
பகிர்:

செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 137-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளி முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் தலைமை வகித்தாா். துணை முதல்வா் க.கோவேந்தன் முன்னிலையில் ஜவாஹா்லால் நேருவின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், பேச்சு, நடனம், கவிதை வாசித்தல் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. நிறைவில் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கான ஏறபாடுகளை பள்ளியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகா்கள் வி.ஜெயந்தி, மு.அஞ்சுகம் ஆகியோா் செய்திருந்தனா்.