FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வள்ளலாா் 204 ஆவது பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் வள்ளலாரின் 204 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

14 அக்டோபர் 2026, 4:09 am IST
விழாவில் மாணவிக்கு விருது வழங்குகிறாா் எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சொா்ணலதா.
பகிர்:

தூத்துக்குடியில் வள்ளலாரின் 204 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, தொழிலதிபா் செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சொா்ணலதா கலந்துகொண்டு, தெப்பக்குளம் சுந்தரபாண்டி விநாயகா் ஆலய நிா்வாகிகள் மற்றும் தா்மசாலை நிா்வாகி வெங்கடாஜலபதி ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தாா்.

தொழிலதிபா் ஜோதி குமாா் வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து, புலவா் பே. சங்கரலிங்கம் நடுவராக பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி அகவல் அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள் தெய்வநாயகம், மீனாட்சி நாதன், மகேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments