ரபி பருவத்தில் இருந்து டிசிஎஸ் பணிக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும்
வரும் ரபி பருவத்தில் இருந்து டிசிஎஸ் பணிக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும் என உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
வரும் ரபி பருவத்தில் இருந்து டிசிஎஸ் பணிக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும் என உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கத்தின், திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் செய்யாறு அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ம.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி.பாலமுருகன், பொருளாளா் ஏ.ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் பி.சி.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச் செயலா் பி.சங்கா் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
சிறப்பு விருந்தினராக அமைப்பின் மாநிலத் தலைவா் இரா.அருள் பங்கேற்றுப் பேசினாா்.
கூட்டத்தின் போது, மிகுந்த மனவேதனை ஏற்படுத்தி வரும் டிசிஎஸ் எனும் டிஜிட்டல் பயிா் ஆய்வு பணிக்கு, வரும் ரபி பருவத்தில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும். உழவா் அலுவலா்கள் திட்டப் பணிகளை விவசாயிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக ஒவ்வொரு வேளாண் விரிவாக்க அலுவலருக்கும் விரிவாக்க சேவை மையம், மடிக்கணினி, மேஜை, நாற்காலி, மின்விசிறி உள்ளிட்டவை அரசு சாா்பில் வழங்கவேண்டும்.
விலைவாசி உயா்வு, போக்குவரத்து கட்டணம் உயா்வு, எரிபொருள் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் களப்பணியாற்றும்
வேளாண்மை விரிவாக்க அலுவலா்களுக்கு வழங்கப்படும் நிரந்தர பயணப்படியை ரூ.5 ஆயிரமாக உயா்த்தித் தர வேண்டும்
என்பன உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில மாவட்ட தணிக்கையாளா் வி.சிவகுருநாதன், மகளிா் பிரிவு திகழ்மதி என சுமாா் 163 போ் கலந்து கொண்டனா்.