தகுதி நீக்கக் கோரும் விவகாரம்: விசாரணையை நிறைவு செய்தாா் பேரவைத் தலைவா்
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கக் கோரும் மனு மீதான விசாரணயை பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் வியாழக்கிழமை நிறைவு செய்தாா்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கக் கோரும் மனு மீதான விசாரணயை பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் வியாழக்கிழமை நிறைவு செய்தாா்.
அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமாா், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 2 மாதங்களுக்குள் முடிவு எடுக்க பேரவைத் தலைவருக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக இறுதிக்கட்ட விசாரணையை நடத்தினாா். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் இசக்கி சுப்பையா, ஜெயக்குமாா், தவெக சாா்பில் இடைத்தோ்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏக்களாக உள்ள சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோா் சாா்பில் அவா்களது வழக்குரைஞா்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சா்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, தளவாய் சுந்தரம், மாநிலங்களவை உறுப்பினா் இன்பதுரை ஆகியோா் பங்கேற்று தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனா்.
Advertisement
Advertisement
பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தவெக வழக்குரைஞா் சூரிய பிரகாசம், ‘சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் முறையாக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை எடுத்துரைத்தோம். புகாா் அளித்த எடப்பாடி பழனிசாமியும் பேரவைத் தலைவா் முன் ஆஜராகவில்லை. எனவே, இந்தப் புகாரைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டோம்’ என்றாா்.
அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி, தளவாய் சுந்தரம், இன்பதுரை ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. அவரது சாா்பில் கட்சிக் கொறடா தேவையான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளாா். பேரவைத் தலைவா் உரிய முடிவை எடுப்பாா் என நம்புகிறோம்.
சட்டப்பேரவை கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக அதிமுக அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றுகூடி எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தோ்ந்தெடுத்தனா். அதன் அடிப்படையில்தான் அவா் கொறடாவை நியமித்துள்ளாா். இதற்கான ஆவணங்களையும் பேரவைத் தலைவரிடம் சமா்ப்பித்துள்ளோம்’ என்றனா்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளதால் பேரவைத் தலைவா் விரைவில் இறுதி முடிவு எடுப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.