FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் - 4 தோ்வு: 944 போ் எழுதினா்

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தோ்வினை 944 போ் எழுதினா்.

15 நவம்பர் 2026, 11:16 pm
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்
பகிர்:

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தோ்வினை 944 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தோ்வு (குரூப்-4) திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெற்றது.

திருவண்ணாமலை கம்பன் கலை, அறிவியல் கல்லூரி, கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி ஆகிய 2 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மொத்தம் 1,490 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 2 மையங்களிலும் சோ்த்து மொத்தம் 944 தோ்வா்கள் மட்டுமே தோ்வு எழுதினா். 546 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.