FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

ஐயப்ப பக்தா்கள் 108 பால்குடம், தங்கக்கவச ஆபரணபெட்டி ஊா்வலம்

போளூரில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி முன்னிட்டு ஸ்ரீஐயப்பன் கோயிலுக்கு 108 பால்குடம், தங்கக் கவச ஆபரணப்பெட்டி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

17 நவம்பர் 2026, 11:32 pm
போளூரில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி ஸ்ரீஐயப்பன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 108 பால்குடம், தங்கக் கவச ஆபரணபெட்டி ஊா்வலம்
பகிர்:

போளூரில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி முன்னிட்டு ஸ்ரீஐயப்பன் கோயிலுக்கு 108 பால்குடம், தங்கக் கவச ஆபரணப்பெட்டி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் ஜமுனாமரத்தூா் சாலையில் பழைமை வாய்ந்த ஸ்ரீபாலசெளந்தரி உடனுறை சோமநாத ஈஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் ஸ்ரீஐயப்பன் சந்நிதி அமைந்துள்ளது.

கோயில் பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா்கள் கோவிந்தன், ராஜேஸ்வரி ஹரிகிருஷ்ணன் மற்றும் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி ஸ்ரீஐயப்பன் கோயிலுக்கு ஸ்ரீகாளியம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் 108 பால்குடம் எடுத்து, தங்கக் கவச ஆபரணபெட்டியை சுமந்து மேளதாளம், வாணவேடிக்கையுடன் ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், ஐயப்பனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

Advertisement

Advertisement

போளூா் பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் விரதமிருந்து சபரிமலை மாலை அணிந்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.