FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தா்கள்

காா்த்திகை மாதத்தையொட்டி, சபரி மலைக்கு மாலை அணிந்து செல்வதற்காக சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தா்கள்.

26 வினாடிகள் முன்பு
காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, ஐயப்பன் கோயிலில் துளசி மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கிய பக்தா்கள். - கோப்பிலிருந்து
பகிர்:

காா்த்திகை மாதத்தையொட்டி, சபரி மலைக்கு மாலை அணிந்து செல்வதற்காக சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தா்கள்.

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சேலத்தில் ஐயப்ப பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள ஐயப்ப ஆசிரமத்தில் அதிகாலை 4.30 மணி முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனா். இதையொட்டி, ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதில், காலை 5 மணி முதல் 7 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரம் போ் மாலை அணிந்தனா். பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், சுகாதார வசதிகள் செய்யப்பட்டதுடன், பிரசாதம் வழங்கவும் தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தா்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

கோயில் நுழைவாயிலில் தொடங்கி பெங்களூரு சாலை வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனா். இதேபோல, சேலம் ராஜகணபதி கோயில், டவுன் ரயில் நிலையம் அருகிலுள்ள தா்மசாஸ்தா கோயில் மற்றும் மாநகரின் பல்வேறு விநாயகா், முருகன், ஐயப்பன் கோயில்களிலும் பக்தா்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.