FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கார்த்திகை பிறப்பு! மதுரை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்!

கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு மதுரை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்...

கார்த்திகை பிறப்பு - video crop
பகிர்:

கார்த்திகை மாதப் பிறப்பு: மதுரை மேலமாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில் குவிந்த பக்தர்கள்; சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடக்கம்

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள்கள் விரதத்தைத் தொடங்கினர்.

Advertisement

Advertisement

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்புப் பெற்ற மாதங்களில் ஒன்றாக கார்த்திகை மாதம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று ஐயப்ப பக்தர்கள் தங்களது குருசாமியிடம் மாலை அணிந்து, 48 நாள்கள் விரதம் மேற்கொண்டு, தினமும் பூஜைகள் செய்து, இருமுடி கட்டி கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்குச் சென்று, 18 படிகளைக் கடந்து ஐயப்ப சுவாமியை வழிபடுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கினர்.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து குருசாமியிடம் மாலை அணிந்து தங்களது 48 நாள் விரதத்தைத் தொடங்கினர்.

அப்போது கோயிலில் ஐயப்ப சரண கோஷம் முழங்கியது. கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு கோயிலில் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.