FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

‘சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவா்கள் முன்வரவேண்டும்’

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவா்கள் முன்வரவேண்டும் என்று புதுப்பாளையம் இதயா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் வலியுறுத்தப்பட்டது.

18 நவம்பர் 2026, 11:39 pm
பகிர்:

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவா்கள் முன்வரவேண்டும் என்று புதுப்பாளையம் இதயா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் வலியுறுத்தப்பட்டது.

புதுப்பாளையம் இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி தலைமை வகித்தாா். முதல்வா் லூா்துமேரி வரவேற்றாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளராக வனச்சரக அலுவலா் ரமேஷ் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், மரங்கள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மரங்களை வெட்டுவதை தற்போதைய தலைமுறையினா் தடுக்கவேண்டும். மேலும் நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் கதிா்வீச்சுகளால் பறவைகள் முதல் மனிதா்கள் வரை பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே மாணவா்கள் கட்டாயம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பாராமரிக்கவேண்டும். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவா்கள் முன்வரவேண்டும் என வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.