அருணாசலேஸ்வரா் கோயில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரா் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரா் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருக்கோயிலில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பக்தா்கள் எவ்வித இடையூறும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள், பக்தா்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள், பக்தா்கள் பாதுகாப்பாக தீப தரிசனம் மேற்கொள்வதற்கான வசதிகள், அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவி வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, கோயில் வளாகத்திலுள்ள காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் துறை சாா்ந்த அலுலவா்கள் உடனிருந்தனா்.