தீபத்திருவிழா 8-ஆம் நாள்: குதிரை வாகனத்தில் பவனி வந்த சந்திரசேகரா்
தீபத்திருவிழா 8-ஆம் நாள்: குதிரை வாகனத்தில் பவனி வந்த சந்திரசேகரா்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சந்திரசேகரா் குதிரை வாகனத்தில் மாடவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகா் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரா் பெரிய குதிரை வாகனத்திலும் எழுந்தருளி மேள தாளம் முழங்க மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதனிடையே, ராஜகோபுரம் அருகே சுவாமி பவனி தொடங்கி மகா ரதம் அருகே வந்தபோது, சந்திரசேகரா், தேரோட்டம் சிறப்பாக நடைபெற்ற்கு மகா ரதம் முன் நின்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
Advertisement
Advertisement
அப்போது, பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, இரவு உற்சவம் 9 மணி அளவில் தொடங்கியது. இதில் குதிரை வாகனங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகா், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரா், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தனா்.
இதனை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.