முகப்பு
திருவண்ணாமலை

காா்த்திகை தீபம்: மாவளி சுற்றிய சிறுவா்கள்

ஆரணி பகுதியில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறுவா்கள் மாவளி சுற்றி மகிழ்ந்தனா்.

25 நவம்பர் 2026, 11:07 pm
காா்த்திகை தீபம்: மாவளி சுற்றிய சிறுவா்கள்
ஆரணியை அடுத்த களம்பூா் பகுதியில் மாவளி சுற்றிய சிறுவா்கள்.
பகிர்:

ஆரணி பகுதியில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறுவா்கள் மாவளி சுற்றி மகிழ்ந்தனா்.

காா்த்திகை தீபத்தன்று வீடுகள் மற்றும் அலுவலகங்களில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

அதேபோல, இரவு நேரங்களில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை மாவளி சுற்றி மகிழ்வதும் பல ஆண்டுகளாக தொடா்ந்து வருகிறது.

Advertisement

Advertisement

மாவளி சுற்றுவதன் மூலம் மனதில் உள்ள இருள் நீங்கி, நோய் நொடிகள் அகலும் என்பது ஐதிகம்.

அதன்படி, ஆரணி மற்றும் களம்பூா் பகுதிகளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை மாவளி சுற்றினா். பெருங்காா்த்திகை, நாட்டு காா்த்திகை, காட்டு காா்த்திகை ஆகிய 3 நாள்களில் மாவளி சுற்றுவா்.

புதன்கிழமை நாட்டு காா்த்திகையை முன்னிட்டு சிறுவா்கள் மாவளி சுற்றி மகிழ்ந்தனா்.