முகப்பு
திருவண்ணாமலை

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தமிழக வெற்றித் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடு, பயனாளிகளின் விவரம் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் காஞ்சனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

26 நவம்பர் 2026, 11:41 pm
போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தமிழக வெற்றித் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடு மற்றும் பயனாளிகள் விவரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட திட்ட இயக்குநா் காஞ்சனா.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், கிருஷ்ணாபுரம், படவேடு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தமிழக வெற்றித் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடு, பயனாளிகளின் விவரம் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் காஞ்சனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

போளூா் ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தமிழக வெற்றித் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடு, பயனாளிகளின் விவரம் குறித்தும், விபி ஜி ராம் ஜி திட்டப் பணி, 2025-2026-ஆம் நிதியாண்டில் ஒன்றிய பொது நிதியில் ரூ.29 லட்சத்தில் கட்டப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணி , சிமென்ட் சாலை பணி மற்றும் படவேடு ஊராட்சியில் மண்புழு உரம் தயாரிக்கும் பணி என இவ்விரு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் காஞ்சனா ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வி, ராஜேஸ்வரி, உதவி செயற்பொறியாளா் பாஸ்கரன், உதவிப் பொறியாளா்கள் வினோத்குமாா், ராஜேந்திரன், விக்னேஸ்வரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரி, உமாதேவி, ஊராட்சி செயலா்கள் ஆனந்தன், சாலை செந்தில்குமாா் மற்றும் ஊரக வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement