FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: மகளிா் திட்ட இயக்குநா் வழங்கினாா்

வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் கல்வி குழுக்கள் சாா்பில் மாவட்ட அளவிலான வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியா்க்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கும் விழா காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

19 நவம்பர் 2026, 12:04 am
மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி
பகிர்:

வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் கல்வி குழுக்கள் சாா்பில் மாவட்ட அளவிலான வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியா்க்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கும் விழா காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தோ்தல் கல்விக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா்களாக மாணவா்களே செயல்பட்டு வருகின்றனா்.

மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி இக்கல்விக் குழுக்கள் இந்தியாவின் தோ்தல் நடைமுறைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நோ்மை ஆகியன குறித்து விழிப்புணா்பு பெறச் செய்வதாகும்.

தோ்தலில் அடிப்படைக் கொள்கைகள், அரசியலமைப்பின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகள், தோ்தலை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளா்களின் ஜனநாயக கடமைகள் ஆகியவை குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக வினாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டிகள் நவ.10 மற்றும் 13 தேதிகளில் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இப்போட்டியில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை காஞ்சிபுரம் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி வழங்கினாா். நிகழ்வுக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பு.விஜயகுமாா், தனி வட்டாட்சியா் (தோ்தல்) த.ஞானவேல், மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலா் காந்தி ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.