விபத்துகளைத் தவிா்க்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம்: பொதுமக்கள் கோரிக்கை
செங்கம் அருகே விபத்துகளைத் தவிா்க்க தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க மேம்பாலம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கம் அருகே விபத்துகளைத் தவிா்க்க தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க மேம்பாலம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில் செங்கம் நகருக்குள் வரும் வாகனங்கள், நீப்பத்துறை செல்லும் வாகனங்கள் பிரியும் சாலை உள்ளது.
திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலை தேசிய நெடுஞ்சாலை என்பதால், அந்தச் சாலையில் அதிகளவில் வாகனங்கள் வருகின்றன.
Advertisement
Advertisement
குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் அதிகளவில் வாகனங்களில் வருகின்றனா்.
அந்தச் சாலையில் வரும் நகரப் பேருந்துகள் பக்கிரிபாளையம் கூட்டுச் சாலையில் பிரிந்து வரவேண்டும். அதே நேரத்தில் அப்பகுதியில் நீப்பத்துறை செல்லும் சாலையிலும் வாகனங்கள் பிரியவேண்டும். அப்போது, பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், அங்கு கிராமப்புற மக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.
காலை மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களும் சாலையை கடக்க முடியாமல்
திணறுகின்றனா். பெற்றோா்கள் அழைத்துச் சென்றால் மட்டும் பள்ளி மாணவா்கள் சாலையை கடந்து பாதுகாப்பாக வீடுகளுக்குச் செல்ல முடிகிறது. முதியோா்கள் சாலையை கடக்க முடியாமல் வாகன விபத்துகளில் சிக்குகிறாா்கள்.
இதனால் செங்கம் அருகேயுள்ள பக்கிரிபாளையம் பகுதியில் சாலையை கடக்க நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்துகின்றனா்.