மகள் இறந்த மன வருத்தம்: தந்தை தற்கொலை
செய்யாறு அருகே 7 வயது சிறுமி இறந்த மன வருத்தத்தில் தந்தை வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

செய்யாறு அருகே 7 வயது சிறுமி இறந்த மன வருத்தத்தில் தந்தை வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பூபாலன்(42). இவரது ஏழு வயது மகள் சஞ்சனாஸ்ரீ சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து போனாா். அதனால் மன வருத்தத்தில் பூபாலன் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் பூபாலன் தூக்கிட்டுக் கொண்டாா்.
Advertisement
Advertisement
இதனைக் கண்ட உறவினா்கள் அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு
மருத்துவா்கள் சிகிச்சை அளித்தும், பலனின்றி பூபாலன் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.