செஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்
ஜெயங்கொண்டான் அருகே மற்றொரு சிறுமி காணாமல்போன செய்தி வருத்தம் அளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளது குறித்து...
செஞ்சி சிறுமியே இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஜெயங்கொண்டான் அருகே மற்றொரு சிறுமி காணாமல்போன செய்தி வருத்தம் அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் அந்தச் சிறுமி மீட்கப்படவில்லை. அதற்குள், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இன்னொரு சிறுமியைக் கடத்த முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஆறு மாதங்களாகியும் சிறிதும் பொறுப்பில்லாத இந்த தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், இப்போது குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளது.
காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், இந்த தவெக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? எனப் பதிவிட்டுள்ளார்.