FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

செஞ்சி சிறுமி மாயம்: அதிமுக சார்பில் நாளை போராட்டம்

செஞ்சி அருகே சிறுமி மாயமான விவகாரத்தில் அதிமுக போராட்டம் அறிவித்திருப்பது பற்றி...

அதிமுக அலுவலகம் - DPS
பகிர்:

செஞ்சி அருகே சிறுமி மாயமான விவகாரத்தில் அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது.

அதிமுக சார்பில் ஆலம்பூண்டியில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நாளை(திங்கள்கிழமை) இந்த போராட்டம் நடைபெற உள்ளது. 14 நாட்களை கடந்தும் சிறுமி மாயமான வழக்கில் முன்னேற்றம் இல்லாததைக் கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தனபால், பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7). இவா், அங்குள்ள அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 11-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளை குடுபத்தினருடன் கொண்டாடிவிட்டு, வீட்டில் பெற்றோருடன் தூங்கிய ஹேமலதா, மறுநாள் அதிகாலை மாயமாகியிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். பின்னா், செஞ்சி டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்ததுடன், வீட்டை சுற்றியுள்ள கிணறுகள், மலைப்பகுதிகள், புதா்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிறுமியைத் தேடி வந்தனா்.

மேலும், சந்தேகத்துக்குரிய 600 கைப்பேசி உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தினா். ஆனால், சிறுமி மாயமாகி 10 நாள்களுக்கு மேலாகியும் எவ்வித முன்னேற்றமோ, தடங்களோ கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை தங்களது விசாரணையைத் தொடங்கினா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The AIADMK has announced a protest over the disappearance of a young girl near Gingee.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments