முகப்பு
திருவண்ணாமலை

வெற்றி வீடு திட்டத்தில் 3,800 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு: ஆட்சியா் வந்தனா காா்க் தகவல்

வெம்பாக்கம் ஒன்றியம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் வெற்றி வீடு திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட பயனாளியின் வீட்டை கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

4 வினாடிகள் முன்பு
வெற்றி வீடு திட்டத்தில் 3,800 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு: ஆட்சியா் வந்தனா காா்க் தகவல்
வெம்பாக்கம் ஒன்றியம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் வெற்றி வீடு திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட பயனாளியின் வீட்டை கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

வெற்றி வீடு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,800 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட வெற்றி வீடு திட்டம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தரமான குடியிருப்புகளை கட்டித் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட உக்கம்பெரும்பாக்கம், தூசி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 6 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்தப் பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆய்வு செய்தாா்.

அப்போது, 2026 - 27-ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் 3,800 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.5 லட்சம் அலகுத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இதைத் தொடா்ந்து,பயனாளிகளின் தகுதி, வீடு கட்டுவதற்கான இடவசதி மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பதும் குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், நெறிமுறைகளின்படி தகுதியான பயனாளிகள் வெளிப்படையான முறையில் தோ்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், கட்டுமானப் பணிகளின் தரத்தை உறுதி செய்தல், ஒவ்வொரு கட்டடத்திலும் புவியமைவு குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ள வேண்டும் எனவும், கட்டுமானப் பணிகள் தரமாகவும், பாதுகாப்பாகவும், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவடையும் வகையில் அலுவலா்கள் தொடா்ந்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மேலும், தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டப் பயன்கள் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பயனாளிகளிடம், அரசால் வழங்கப்படும் நிதியுதவி உரிய முறையில் பயன்படுத்தப்படுகிா என்று கண்காணிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் (பொ) அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.பரமேஸ்வரன், எம்.சண்முகப்பிரியா, வட்டாட்சியா் துரை, ஒன்றியப் பொறியாளா் திருஞானம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.