தொழிலாளி விஷமருந்தி தற்கொலை
செய்யாறு அருகே தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு அருகே தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்டு கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வரதன் மகன் நாகப்பன்(51), தொழிலாளி. இவா் சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அழிஞ்சல்பட்டு கிராம ஏரிக்கரை அருகேயுள்ள விவசாய நிலத்தில், பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளாா். இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
Advertisement
Advertisement
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், நாகப்பன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.