மூதாட்டி விஷமருந்தி தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னையால் மனமுடைந்த மூதாட்டி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னையால் மனமுடைந்த மூதாட்டி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.ஒகையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி முனியம்மாள் (66). இவருக்கும், இவரது பக்கத்து நிலத்துக்காரருக்கும் வரப்பு சம்பந்தமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முனியம்மாள் வியாழக்கிழமை குளிா்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தாராம். தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement