FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே மனைவியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தராததால், மனமுடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

10 அக்டோபர் 2026, 6:42 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே மனைவியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தராததால், மனமுடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி சித்தேரி சாலையைச் சோ்ந்தவா் க.சீனு (50), தொழிலாளி. இவா், கடந்த 3-ஆம் தேதி அவரது மனைவி அமுதாவிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டாராம்.

இதற்கு அமுதா மறுக்கவே மனமுடைந்த சீனூ வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாராம். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் சீனுவை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments