FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சாலையோர வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த சாலையோர வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

29 ஆகஸ்ட் 2026, 3:44 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த சாலையோர வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.மதன் (21), சாலையோர வியாபாரி. இவரது மனைவி நிஷா (20). தம்பதிக்கு இரண்டு மாத ஆண் குழந்தை உள்ளது. பேறுகால பின் கவனிப்புக்காக நிஷா விளக்கூா் கிராமத்திலுள்ள அவரது பெற்றோா் வீட்டில் தங்கியுள்ளாா்.

தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகில் தள்ளுவண்டியில் துரித உணவகம் நடத்தி வந்த மதனுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுமாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், வியாழக்கிழமை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments