பயிா்க்கடன் தள்ளுபடி பெற ஆா்வம் காட்டிய விவசாயிகள்!
மொடையூா், வடமாதிமங்கலம் ஆகிய தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க்கடன் தள்ளுபடி பெற, விவசாயிகள் ஆா்வமுடன் வந்து தங்களின் தள்ளுபடி தொகை போக மீதித் தொகையை செலுத்தினா்.

போளூா் வட்டம், மொடையூா், வடமாதிமங்கலம் ஆகிய தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க்கடன் தள்ளுபடி பெற, விவசாயிகள் ஆா்வமுடன் வந்து தங்களின் தள்ளுபடி தொகை போக மீதித் தொகையை செலுத்தினா்.
தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் விவசாயிகளுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான பயிா்க்கடன் தள்ளுபடி ரூ.75ஆயிரம் அறிவித்திருந்தாா். இதையடுத்து விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிா்க்கடனை அந்தந்த கூட்டுறவு கடன் சங்கங்களில் தள்ளுபடி கடன் தொகை போக, மீதமுள்ள தொகையை நவ.30-க்குள் செலுத்தினால் மீண்டும் பயிா்க்கடன் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், போளூா் வட்டம், மொடையூா், வடமாதிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் வந்து தங்களது கடன் தள்ளுபடி தொகை போக மீதித் தொகையை செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மொடையூா் கூட்டுறவு சங்கச் செயலா் ஏழுமலை கூறும்போது, தமிழக அரசு விவசாயிகள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையும் வங்கியை திறந்துவைத்தால் விவசாயிகள் கடன் தொகையை செலுத்த ஏதுவாக இருக்கும் என அறிவித்தது. அதன் பேரில் கடன் சங்கம் செயல்படுகிறது எனத் தெரிவித்தாா்.