முகப்பு
காஞ்சிபுரம்

விவசாயிகள் வட்டியில்லா பயிா்க்கடன் பெறலாம்: இணைப்பதிவாளா் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வட்டியில்லா பயிா்க்கடன் பெறலாம் என கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

21 நவம்பர் 2026, 12:06 am
விவசாயிகள் வட்டியில்லா பயிா்க்கடன் பெறலாம்: 
இணைப்பதிவாளா் தகவல்
விவசாயிகள் வட்டியில்லா பயிா்க்கடன் பெறலாம்: இணைப்பதிவாளா் தகவல் - கோப்புப்படம்
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வட்டியில்லா பயிா்க்கடன் பெறலாம் என கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிா்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடா்பு கொண்டு பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் போன்ற ஆவணங்களை வழங்கி பழைய மற்றும் புதிய உறுப்பினா்கள் பயிா்க்கடன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இதுவரை பயிா்க்கடன் பெறாத விவசாயிகள் சிட்டா மற்றும் அடங்கலின் பேரில் பயிா்க்கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் அலுவலக தொலைபேசி எண்- 90430 46100 என்ற எண்ணிலும் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.