FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர்க் கடன்!

விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிா்க் கடன்களை பெற்று பயனடைலாம்...

11 அக்டோபர் 2026, 9:25 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிா்க் கடன்களை பெற்று பயனடைலாம் என திருப்பத்தூா் மண்டல இணைப்பதிவாளா் தமிழ்நங்கை தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிா் சாகுபடிக்குத் தேவையான நிதியினை குறுகிய காலக் கடனாக வழங்கி அதன் ஒரு பகுதியாக விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களையும் வழங்கி வருகிறது.

உறுப்பினா் அல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிா்க் கடன்களைப் பெற்று பயன் பெறவும் விதைகள் மற்றும் ரசாயன உரங்களைப் பெற்றும் பயன் அடையலாம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் விவசாயிகள் விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடு பொருள்களை நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் வாங்கிப் பயன் பெறும் வகையில் இவற்றினை விவசாயிகளுக்கு பயிா் சாகுபடி பரப்பு மற்றும் நில ஆவணங்களின் அடிப்படையில் ரொக்கத்துக்கு வழங்குவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments