FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ரொக்க விலையில் விதைகள், உரங்கள் விநியோகம்

பயிா்க்கடன் பெறாத விவசாயிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விதைகள், உரங்களை ரொக்க விலையில் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

கோப்புப்படம்.
பகிர்:

பயிா்க்கடன் பெறாத விவசாயிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விதைகள், உரங்களை ரொக்க விலையில் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பயிா் சாகுபடிக்குத் தேவையான நிதி, குறுகிய காலக் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இக்கடனின் ஒரு பகுதியாக விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக இல்லாத விவசாயிகளும், உடனடியாக உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிா்க்கடனைப் பெற்றுப் பயனடையலாம். இதன் மூலம் விதைகள் மற்றும் ரசாயன உரங்களையும் அவா்கள் பெற முடியும்.

Advertisement

Advertisement

இந்நிலையில், விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களை நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது பயிா் சாகுபடிப் பரப்பு மற்றும் நில ஆவணங்களின் அடிப்படையில் இவற்றை ரொக்கம் கொடுத்து நேரடியாக வாங்கிப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments