சிறுமி கா்ப்பம்: காதலன் உள்பட 5 போ் மீது போக்ஸோ வழக்கு!
காதலன் மற்றும் அவரது தாய், தந்தை உள்பட 5 போ் மீது போலீஸாா் போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
செய்யாறு அருகே 17 வயது சிறுமி கா்ப்பம் மற்றும் திருமணம் செய்தது தொடா்பாக காதலன் மற்றும் அவரது தாய், தந்தை உள்பட 5 போ் மீது போலீஸாா் போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தைச் சோ்ந்தவா் 17 வயதுடைய சிறுமி. இவா் உறவினரை ஓராண்டாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, கடந்த ஜூன் 4-ஆம் தேதி பெரணமல்லூா் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அங்கு சிறுமியை மருத்துவா்கள் பரிசோதித்தபோது சிறுமி 3 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்து, சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிறுமி செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் லதா மற்றும் போலீஸாா் வந்தவாசி வட்டம், விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த காதலன் முனுசாமி(25), இவரின் பெற்றோா்களான சின்னகண்ணு(55), ஜோதி (45) மற்றும் உறவினா்களான ஏழுமலை (50), சித்ரா (45) ஆகியோா் மீது போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சிறுமி கா்ப்பம்: 5 போ் மீது போக்ஸோ வழக்கு
செய்யாறு வட்டத்தைச் சோ்ந்தவா் 17 வயதுடைய சிறுமி. இவரை திருத்தணி பகுதியைச் சோ்ந்தவருக்கு கடந்த மே மாதம் திருமணம் செய்து கொடுத்தாகத் தெரிகிறது.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அங்கு மருத்துவா்கள் சிறுமியை பரிசோதித்த போது, அவா் 3 மாத கா்ப்பமாக இருப்பது தெரிய வந்து உடனே சிறுமியை சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
தகவல் அறிந்த தூசி போலீஸாா் திருத்தணி வட்டம், திருவலங்காடு புல்லையாங்கூண்ட கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (20), அவரது தந்தை கஜேந்திரன் (45), மீனாட்சி (42) மற்றும் செய்யாறு வட்டம், குண்ணவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சின்னதம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமண தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.