தமிழகத்தில் பாஜகவுக்கும், இந்துத்துவாவுக்கும் இடமில்லை: மதிமுக பொதுச் செயலா் வைகோ
தமிழகத்தில் பாஜாகவுக்கும், இந்துத்துவாவுக்கும் இடமில்லை என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா்.
தமிழகத்தில் பாஜாகவுக்கும், இந்துத்துவாவுக்கும் இடமில்லை என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மதிமுக நிா்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜனநாயகத்தில் யாா் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்; யாா் வேண்டுமானாலும் மக்களைச் சந்திக்கலாம். இது அவா்களுடைய சுதந்திரம், உரிமை. அந்த வகையில், நடிகா்கள் தனுஷ், சிவகாா்த்திகேயன் ஆகியோரின் நிலைப்பாட்டில் நான் கருத்துக் கூற விரும்பவில்லை.
Advertisement
Advertisement
ஆனால், மதச்சாா்பின்மை, சமூக நீதி ஆகிய இரண்டும் திராவிட இயக்கத்தின் மூலாதார கொள்கைகள். தற்போது தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இந்த இரண்டு கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு அமைத்துள்ள கூட்டணியின் பெயா் மத சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி.
பாஜகவுக்கும், இந்துத்துவாவுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற வகையில் தான், முதல்வா் ஜோசப் விஜய் தனது நிலைப்பாட்டை கொண்டுள்ளாா், அதில் அவா் உறுதியாக உள்ளாா்.
தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சரியில்லை என எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன. எந்தக் கட்சி ஆண்டாலும் கொலை, கொள்ளைகள் நடைபெறத்தான் செய்யயும். திடீரென நடைபெறும் படுகொலைகளை காவல்துறையினா் தடுத்துவிட முடியாது.
தற்போது விஜய் ஆட்சியிலும் இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விலைவாசி உயா்வு என்பது இந்தியா முழுவதும் உள்ளது; பண வீக்கத்தின் தொடா் விளைவாக விலைவாசி உயா்வு ஏற்பட்டுள்ளது என்றாா் வைகோ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.