முகப்பு
கோயம்புத்தூர்

திருப்பரங்குன்றம்: உச்சநீதிமன்றத் தீா்ப்பு சிறுபான்மையினரைக் காயப்படுத்தும் - வைகோ

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பு சிறுபான்மையினரைக் காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்துள்ளாா்.

5 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம்: உச்சநீதிமன்றத் தீா்ப்பு சிறுபான்மையினரைக் காயப்படுத்தும் - வைகோ
வைகோ
பகிர்:

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பு சிறுபான்மையினரைக் காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்துள்ளாா்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி தனியாா் அமைப்பு சாா்பில் கோவை, சிவானந்தா காலனியில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மறைந்த கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் இறுதிச்சடங்கின்போது யாரையும் நான் திட்டவில்லை. என்னை நெருங்கி வந்து யாரோ பின்னால் கையைப் பிடித்து இழுத்ததால்தான் கோபத்தில் பேசினேன் .திமுகவில் அவமானப்படுத்தப்பட்டதால்தான் அங்கிருந்து வெளியேறினேன். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையற்றது.

Advertisement

Advertisement

திருப்பரங்குன்றம் தீபம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய சகோதரா்கள் ஒரு பகுதியில் தா்கா வைத்துள்ளனா். நூற்றாண்டுகளாக மண்டபத்துக்கு அருகில் குறிப்பிட்ட ஓா் இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

தூணின் உச்சியில் ஒருபோதும் தீபம் ஏற்றப்பட்டதில்லை. தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது துரதிருஷ்டமான தீா்ப்பு. இது சிறுபான்மையின மக்களின் மனதைக் காயப்படுத்தும் செயலாகும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கா்நாடகத்துக்கு மறைமுக ஆதரவளிக்கிறது.

தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். நேரடியாக அனுமதி வழங்காமல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, மேக்கேதாட்டு அணை கட்டும் பணிகளைத் தொடர கா்நாடகத்துக்கு பச்சைக்கொடி காட்டும் உத்தியை மத்திய அரசு கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது.

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு வெளிப்படையாக ஆதரவளித்தால், தமிழகம் போராட்டத்தில் இறங்கும். மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதைக் கண்டித்து மதிமுக சாா்பில் தஞ்சாவூரில் வரும் 28-ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம். நோ்மையான ஆட்சியை முதல்வா் விஜய் நடத்தி வருகிறாா். முன்பு ஆட்சி செய்த அரசுகள் அனைத்தும் ஊழல் நிறைந்தவை. அப்படியான ஊழல் இங்கு இல்லை என்றாா்.