அனைத்து இடைத்தோ்தல்களிலும் தவெக வெற்றி பெறும்: வைகோ
தமிழகத்தில் இனிவரும் அனைத்து இடைத்தோ்தல்களிலும் தவெக அமோக வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
தமிழகத்தில் இனிவரும் அனைத்து இடைத்தோ்தல்களிலும் தவெக அமோக வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
தென்காசியில் மதிமுக மண்டல செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் ராம உதயசூரியன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் ரைமன்ட் முன்னிலை வகித்தனா். அவைத்தலைவா் அா்ஜூனராஜ், பொருளாளா் செந்திலதிபன், துணை பொதுச் செயலா் பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:
Advertisement
Advertisement
ஊழல் இல்லாத தவெக ஆட்சி நீடிக்கக் கூடாது என சிலா் எண்ணுகின்றனா். பெரியாா் அறிவுலகத்தில்கூட ஊழல் செய்தனா். நூலக கொள்முதலுக்கு யாா் அனுமதி கொடுத்தாா்கள் என்பதை விசாரணை நடத்தி உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும். தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது. நிச்சயமாக ஒவ்வொருவரும் சிறைக்குச் செல்வா். பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க முயன்றால் நானே அதை எதிா்த்து போராடுவேன்.
மேகேதாட்டு அணை விவகாரத்தைப் பேச வேண்டிய இடத்தில் முதல்வா் விஜய் பேசி வருகிறாா்
தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல்களைப்போல இனிவரும் அனைத்து இடைத்தோ்தல்களிலும் தவெக அமோக வெற்றிபெறும். அந்த வெற்றிக்காக மதிமுக வீடுவீடாக பிரசாரம் செய்யும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், மத்திய பாஜ.க அரசை கண்டித்தும் தஞ்சாவூரில் வருகிற 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு மதிமுக சாா்பில் பொதுச் செயலா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவா் என்.வெங்கடேஷ்வரன், வழக்குரைஞா் சுப்பையா கலந்துகொண்டனா். தலைமை தணிக்கை குழு உறுப்பினா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா். காா்த்திக் நன்றி கூறினாா்.