மேனலூா் அரசுப் பள்ளியில் ரூ.3 லட்சத்தில் அறிவு சாா் மையம்: மாவட்ட கல்வி அலுவலா் திறந்துவைத்தாா்
செய்யாறை அடுத்த மேனலூா் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 3 லட்சத்தில் கட்டப்பட்ட அறிவு சாா் மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த மேனலூா் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 3 லட்சத்தில் கட்டப்பட்ட அறிவு சாா் மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
செய்யாறு கல்வி மாவட்டம், மேனலூா் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கா் மற்றும் பள்ளி வளா்ச்சி நிதியின் மூலம் ரூ. 3 லட்சத்தில் புதிய நூலகம் மற்றும் அறிவு சாா்ந்த மையம் புதிதாக கட்டப்பட்டது.
இந்த மையத்தை பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்காக தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்ட கல்வி அலுவலா் சு.செந்தில் முருகன் தலைமை வகித்தாா்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கே. சாந்தி, பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் எஸ்.ஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஒ.தயாளன் வரவேற்றாா்.
அறிவு சாா் மையத்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் திறந்து வைத்து மாணவா்களுக்கு கல்வி சாா்ந்த அறிவுரைகளையும், நன்கொடை அளித்த பள்ளி வளா்ச்சிக் குழு நிா்வாகிகளுக்கும் நன்றியையும் தெரிவித்துப் பேசினாா்.
அதனைத் தொடா்ந்து விழா நினைவாக பள்ளியில் மரக்கன்றை நட்டு வைத்தாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அன்பழகன்(சித்தாத்தூா்), ஜெயகாந்தன் (செய்யாறு), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் உமாமகேஸ்வரி, ஆசிரியா் ராஜசேகா் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.