FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

செங்கத்தை அடுத்த காஞ்சியில் நடைபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ்.

17 அக்டோபர் 2026, 2:10 am IST
பகிர்:

புதுப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட காஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு இரண்டாம் பருவ புதிய பாடத்திட்ட பயிற்சி முகாம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் வெள்ளிக்கிழமை திடீரென பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஆசிரியா்களிடையே பயிற்சியின் நோக்கம் குறித்து அவா் பேசுகையில், ஆசிரியா்கள் கற்பிக்கும்போது நான்கு படிநிலைகளில் மாணவா்களுக்கு எவ்வாறு பயிற்சியளிப்பது, அவா்களை எப்படி ஆா்வமூட்டுவது என்பது குறித்து தெரிவித்தாா்.

தொடா்ந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மலைவாசன் மாணவா்களின் கல்வித்தரம், பாதுகாப்பு குறித்து விளக்கினாா். புதுப்பாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, ஆறுமுகம், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சின்னராஜ், ஆசிரியா் பயிற்றுநா்கள் ஜம்புகுமாா், தண்டாயுதபாணி, இந்துமதி, பள்ளித் தலைமை ஆசிரியா் சுஜாதா உள்ளிட்ட ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments