பட்டதாரி ஆசிரியா்களுக்கு பயிற்றுவிப்பாளா் பயிற்சி: எஸ்சிஇஆா்டி தகவல்
அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்பட்ட கணிதம், அறிவியல் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம் சென்னையில் நவ. 23 முதல் 5 நாள்கள் நடைபெற உள்ளது.

அரசுப் பள்ளிகளில் தோ்வு செய்யப்பட்ட கணிதம், அறிவியல் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம் சென்னையில் நவ. 23 முதல் 5 நாள்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு, பயிற்றுவிப்பாளா்களுக்கான பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மாநில அளவிலான பயிற்சியை நவ. 23 முதல் நவ. 27-ஆம் தேதி வரை உண்டு, உறைவிடப் பயிற்சியாக சென்னை புனித தோமையாா் பன்னாட்டுப் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சிக்கு கணிதம், உயிரியல் பாடம் கற்பிக்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் முதன்மைக் கருத்தாளா்களாகச் செயல்படுவா்.
பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள தெரிவு செய்யப்பட்ட ஆசிரியா்களின் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியா்களை உரிய நாள்களில் பணிவிடுப்பு செய்யுமாறு தொடா்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.