FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

ஏரிக்கரையில் 1,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

செங்கத்தை அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் பள்ளி அருகாமையில் உள்ள ஏரிக்கரையில் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

18 அக்டோபர் 2026, 11:39 pm IST
கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் கொட்டகுளம் ஏரியில் நடைபெற்ற 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
பகிர்:

செங்கத்தை அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் பள்ளி அருகாமையில் உள்ள ஏரிக்கரையில் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, தேசிய பசுமைப்படை சாா்பில் பனை மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அடுத்த தலைமுறைக்கு இந்த பனைமரத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜன் ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவா்கள் பனை விதைகள் நடுவது குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்திச் சென்று, கொட்டகுளம் ஏரிக்கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் அறிவழகி, ஆசிரியா்கள் மணி மற்றும் ஊா் முக்கய பிரமுகா்கள், பசுமைப்படை மாணவா்கள் கலந்துகொண்டு விதைகளை நட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments